ஸ்கிரிப்ட் ஒப்படைக்கும் செயல்முறை

  • பிப்ரவரி 11, 2023
blog-image

ஸ்கிரிப்ட் எழுத்தாளர்கள், ஸ்கிரிப்டிக்குக்கு விரிவான சுருக்கக்கதையை முதலில் அனுப்பிய பின்னர் தங்கள் முழுமையான ஸ்கிரிப்டுகளை பதிவு செய்யப்பட்ட ஸ்கிரிப்டுகளை அனுப்பலாம் (திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் அல்லது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் அல்லது வேறு எந்த வகையிலாவது பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்) தெளிவான கையொப்பத்துடன், பதிவு செய்த எண்ணை, கதைச்சுருக்கம்/ஸ்கிரிப்ட் ஒப்படைப்பு படிவத்தில் (வலைதளத்தில் கிடைக்கும்) குறிப்பிட்டிருக்க வேண்டும். சுருக்கம் மற்றும் சுருக்கம்/ஸ்கிரிப்ட் ஒப்படைப்பு படிவம் ஆகிய இரண்டையும் ஸ்கிரிப்டிக் குழுவுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட கதைச்சுருக்கத்தை ஸ்கிரிப்டிக் குழு அடுத்த நிலைக்கு ஏற்றதா என்பதை ஆராய்கிறது. அடுத்த நிலைக்கு ஏற்ற கதை என்னும் பட்சத்தில், முழுமையான கதையை அனுப்பும்படி ஸ்கிரிப்டிக் குழு உங்களிடம் கேட்டுக்கொண்ட பின்னர், முழுமையாக எழுதப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்பட்ட ஸ்கிரிப்டை எங்கள் அலுவலகத்திற்கு (அச்சிடப்பட்ட படியுடன்) அல்லது தெளிவான கையொப்பத்துடன் நிகழ்நிலையில் கிடைக்கக்கூடிய ஸ்க்ரிப்ட் படிவத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

முழுவதுமாக பிணைக்கப்பட்ட ஸ்கிரிப்டை ஸ்கிரிப்டிக் குழு ஆய்ந்து அறிந்து பொருத்தமானது என்று கண்டறியப்பட்டால் எழுத்தாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு இருவரும் இணைந்து பணியாற்ற வழிவகை செய்கிறது.

விரிவான சுருக்கம் மற்றும் பிணைக்கப்பட்ட ஸ்கிரிப்டுகள் இரண்டும் ஆங்கிலம் அல்லது தமிழில் இருக்க வேண்டும். தங்க்லீஷ் அல்லது வேறு எந்த மொழி வடிவமும் ஏற்கப்படாது.

கதையின் தன்மையை அறிந்துகொள்ள விரிவான கதைச்சுருக்கத்தை ஸ்கிரிப்டிக் குழுவிற்கு அனுப்ப வேண்டும். கதையின் ஒரு பகுதியை மட்டும் குறிப்பிட்டு இருந்தால், அந்தக் கதைச்சுருக்கத்தைக் குழு ஏற்காது. விரிவான கதைச்சுருக்கம் குறைந்தது 4 முதல் 5 பக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

ஒப்படைக்கப்பட்ட ஸ்கிரிப்ட் 175 பக்கங்களுக்கு மேல் இருக்கக்கூடாது. ஸ்கிரிப்ட் எழுத்தாளர்கள், ஒப்படைக்கும் ஸ்கிரிப்டுகள் 175 பக்கங்களுக்கு மேல் இல்லாததை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஸ்கிரிப்ட் 175 பக்கங்களுக்கு மேல் இருக்குமாயின், நேரமின்மையால் ஸ்கிரிப்டிக் குழுவுக்கு, ஸ்கிரிப்ட் அனுப்பப்படமாட்டாது. / தடை செய்யப்படுகிறது.

ஸ்கிரிப்டிக் குழு, ஒப்படைக்கப்பட்ட ஒவ்வொரு சுருக்கத்தையும் அல்லது முழு ஸ்கிரிப்டையும் ஒவ்வொரு கட்டத்திலும் ஒப்புக்கொள்ளப்படுவதை உறுதி செய்கிறது. ஏற்கப்படவில்லை என்றால் எழுத்தாளர்களுக்கு ஸ்கிரிப்ட் மறுப்பு படிவத்தை (SRF) அனுப்புகிறது.

திறமையான எழுத்தாளர்களைக் ஒன்றிணைப்பதற்கான(டை-அப்) விதிமுறைகள் ஸ்கிரிப்ட்டிற்கு ஸ்கிரிப்ட் மாறுபடும் மற்றும் எழுத்தாளர்களின் பின்னணி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில், ஸ்கிரிப்டிக் மற்றும் எழுத்தாளர்களின் ஆர்வத்தை மனதில் கொண்டு டை-அப் செய்யப்படும்.

திரைக்கதை எழுத்தாளர்கள் விருப்பம் இருந்தால் தங்களின் பதிவுசெய்யப்பட்ட ஸ்கிரிப்ட் புத்தகத்தின் மென்நகலை (PDF) அனுப்புவதை விட வன்நகலை ஒப்படைக்கலாம். விரிவான கதைச்சுருக்கத்தை எழுத்தாளரின் வசதிக்கேற்ப மென்நகலாக மின்னஞ்சல் மூலமாகவோ, முழு ஸ்கிரிப்டை வன்நகலாகவோ அனுப்பலாம்.

பின் நாட்களில் ஏற்படும் பதிப்புரிமைச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகப் பதிவுசெய்யப்படாத ஸ்கிரிப்டுகள் ஸ்கிரிப்டிக் குழுவால் மதிப்பீடு செய்யவோ படிக்கவோ அனுமதிக்கப்படாது. பதிவுசெய்யப்பட்ட ஸ்கிரிப்ட்கள் ஸ்கிரிப்ட் எழுத்தாளர்களின் ஆர்வத்தைப் பாதுகாத்து, ஸ்கிரிப்டிக்குடன் இணைவதற்கு முன் தங்கள் ஸ்கிரிப்டுகளைப் பதிவுசெய்ய அனைவரையும் ஊக்குவிக்கிறது.

திரைக்கதை எழுத்தாளர்கள் தங்களது விரிவான சுருக்கத்தை, கதைச்சுருக்கச் சமர்ப்பிப்பு படிவத்துடன் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்: contact@scriptick.in

அவர்கள் தங்களின் முழு திரைக்கதையைச் சமர்ப்பித்தால், தொடர்புப் பிரிவில் கொடுக்கப்பட்டுள்ள அலுவலக முகவரியில் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட கதைச்சுருக்கச் சமர்ப்பிப்புப் படிவத்துடன் அதைச் சமர்ப்பிக்கலாம்.

Scriptick

Vijayendra Prasad, Writer

"A person who can tell a good lie can be a good storyteller. You have to create something out of nothing. You have to present a lie, which looks like the truth."

Scriptick

Morgan Freeman

“Big budget movies can have big budget perks, and small budget movies have no perks, but what the driving force is, of course, is the script”

Scriptick

Vincente Minnelli

“It’s always the story that interests me.”

Scriptick

David Lean

“I’m first and foremost interested in the story, the characters.”

Scriptick

Mel Brooks

“Everything starts with writing. And then to support your vision, your ideas, your philosophy, your jokes, whatever, you’ve gotta perform them and/or direct them, or sometimes just produce them.”

Scriptick

Jessica Raine

“For any role, I pretty much always go to the script, first and foremost.”