முனைவர் கோ. தனஞ்ஜெயன்
தயாரிப்பாளர்-திரைக்கதை எழுத்தாளர்-ஆசிரியர்-பாஃப்டா திரைப்படக் கல்லூரி நிறுவனர்
முனைவர் கோ. தனஞ்ஜெயன் மேலாண்மை நிபுணராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக கார்ப்பரேட் தொழில் அனுபவத்துடன், 2016 ல் தொழிலதிபராக ஆவதற்கு முன்னதாகக் கன்சாய் நேரொலாக் பெயிண்ட்ஸ், ஸரிகம -எச்எம்வி, ஏர்டெல், வோடாபோன், மோசர் பேர் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் டிஸ்னி யுடிவி போன்றவற்றில் உயர்பதவியில் இருந்துள்ளார். இவர் சிறந்த எழுத்தாளராக இரண்டு முறை தேசிய விருது பெற்ற எழுத்தாளர் (2014 மற்றும் 2016 ஆண்டுகள்) மட்டுமல்லாமல் மும்பை பல்கலைக்கழகத்தில் திரைத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றவர் ஆவார். அவர் தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் திரைப்பட தயாரிப்பு, சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகம் ஆகியவற்றில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக 40 க்கும் மேற்பட்ட படங்களில் ஈடுபட்டுள்ளார், அவற்றில் பல படங்கள் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிபெற்ற படங்களாகும். ஜோதிகா நடித்த காற்றின் மொழி, விஜய் ஆண்டனி நடித்த கொலைகாரன் மற்றும் கோடியில் ஒருவன் ஆகிய படங்கள் அவரது சமீபத்திய வெற்றிப் படங்கள் ஆகும்.
முனைவர் கோ. தனஞ்ஜெயன் அவர்கள் 2015 இல் உருவாக்கப்பட்ட போப்தா திரைப்பட நிறுவனத்தின் நிறுவனர்-இயக்குனர் ஆவார், இந்நிறுவனம், இன்று தமிழ்நாட்டின் முன்னணி திரைப்பட நிறுவனமாக கருதப்படுகிறது. மேலும் 2016 இல் திரைத் துறையின் சிறந்த முன்னுதாரணமாக இந்நிறுவனம் விளங்குகின்றது. கொரோனா காலகட்டத்திற்குப்பிறகு பல சவால்கள் இருந்தபோதிலும், அவர் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துகிறார்.
முனைவர் கோ. தனஞ்ஜெயன் அவர்கள் பிரபல நடிகர் விஜய் ஆண்டனியுடன் (கொலை, காக்கி, மழை பிடிக்காத மனிதன் மற்றும் ரத்தம்) பல படங்களைத் தயாரித்து திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளார்.
முனைவர் கோ. தனஞ்ஜெயன் தமிழ்த் திரைப்படங்களுக்கான முன்னணி திரைப்படத் துறை சங்கமான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (TFAPA) நிறுவனர்களில் ஒருவர் மற்றும் பொருளாளர் ஆவார்.
முனைவர் கோ. தனஞ்ஜெயன் திரைப்பட விநியோகத்திலும் ஈடுபட்டுள்ளார் மேலும் இவன் தந்திரன், அசுரன், காவல் துறை உங்கள் நண்பன், கயமை கடக்க, இறுதி பக்கம், மற்றும் பரோல் போன்ற பல குறிப்பிடத்தக்க படங்களை விநியோகம் செய்துள்ளார்.
முனைவர் கோ. தனஞ்ஜெயன் ஒரு திரைக்கதை எழுத்தாளர் மற்றும் ஒரு சில படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். இவரின் அடுத்த திரைக்கதையை தற்போது நடிகை ஹன்சிகாவை வைத்து ‘காந்தாரி’ என்ற பெயரில் இயக்குனர் ஆர்.கண்ணன் படமாக தயாரித்து வருகிறார். அவர் திரைக்கதை மற்றும் திரைத்துறை குறித்து திரைக்கதை எழுத்தாளர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்துகிறார்.
முனைவர் கோ. தனஞ்ஜெயன் 2010 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களின் சமூக ஊடக சந்தைப்படுத்துதலில் முன்னோடியாகக் கருதப்படுகிறார், மேலும் திரைப்படத் துறையில் தனது புதுமையான சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரத் திறன்களுக்காக அறியப்படுகிறார். திரைத்துறை சார்ந்த அனைத்து மன்றங்களிலும் திரைப்படத் துறையின் நலன்களை மேம்படுத்துவதிலும் இவர் பங்கேற்று இருக்கிறார்.
தென்னிந்தியத் திரைத்துறையின் சிஐஐ உச்சி மாநாட்டின் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார்.
“If you have someone on set for the hair, why would you not have someone for the words?”