ஸ்கிரிப்ட் ஒப்படைக்கும் செயல்முறை
ஸ்கிரிப்ட் எழுத்தாளர்கள் , ஸ்கிரிப்டிக்குக்கு விரிவான சுருக்கக்கதையை முதலில் அனுப்பிய பின்னர் தங்கள் முழுமையான ஸ்கிரிப்டுகளை அனுப்பலாம்...
மேலும் படிக்கநல்ல திரைக்கதைகளைச் சரியான தயாரிப்பு நிறுவனங்களிடம் சேர்க்கும் வழி
சிறந்த கலைஞர்களால் தேர்வு செய்யப்பட்ட திரைக்கதைகளுக்கான வங்கி
சரியான தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைய எழுத்தாளர்களுக்கான வரம்
கதையே கதாநாயகன் என்பது திரைத்துறையில் அனைவரும் அறிந்த உண்மை. காலம் காலமாக நல்ல திரைக்கதைகளே திரைத்துறைக்கு முதுகெலும்பாகத் திகழ்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இருப்பினும் சிறந்த திரைக்கதைகளைத் தேர்வு செய்வது தயாரிப்பாளர்களுக்குப் பெரும் சவாலாகவே இருக்கிறது. கிடைத்த நான்கைந்து திரைக்கதைகளில் ஏதோ ஒன்றுடன் சமரசம் செய்துகொள்ளவேண்டியுள்ளது.
மேலும் படிக்கதயாரிப்பாளர்களின் இயக்குநர்களின் நேரத்தைச் சேமிக்கும் வண்ணம், சிறந்த திரைக்கலைஞர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைக்கதைகளைப் படப்பிடிப்புக்குத் தயார் நிலையில் இருக்கும் வண்ணம் தொகுக்கவே ஸ்கிரிப்டிக் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய எழுத்தாளர்களுக்கு வழிகாட்டவும், சரியான விதத்தில் திரைக்கதைகள் அமைக்கவும், அவர்கள் எழுதிய சிறந்த படைப்புகளைச் சரியான தயாரிப்பு நிறுவனத்திற்குக் கொண்டு சேர்த்து அவர்கள் படைப்புக்குத் தகுந்த சன்மானம் வழங்க வழிசெய்யவும் ஸ்கிரிப்டிக் முனைகிறது.
உங்கள் திரைக்கதைகள் மேன்மையுற உதவி புரிந்து சரியான தயாரிப்பு நிறுவனத்துக்கு எடுத்துச் செல்வோம்.
உங்கள் தயாரிப்புச் செலவுக்கு உகந்த, தேர்வு செய்த திரைக்கதைகளை உங்களுக்கு வழங்குகிறோம்
ஸ்கிரிப்டிக் குழுவின் ஒரு பகுதியாகத் திரைக்கதை வல்லுநர்கள் குழு அமைந்துள்ளது. அக்குழுவை முனைவர் மதன் கார்க்கி மற்றும் முனைவர் ஜி.தனஞ்செயன் அவர்களுடன், புகழ்பெற்ற திரைக்கதை எழுத்தாளர், கதாசிரியர் மற்றும் திரைக்கதை எழுத்து பயிற்சியாளரான ‘கருந்தேள்’ ராஜேஷ் அவர்களால் வழிநடத்தப்படுகிறது. அனைத்து குழு உறுப்பினர்களும், திரைக்கதை மதிப்பீடு மற்றும் பகுப்பாய்வினை மேற்கொள்வார்கள்.
மேலும் படிக்கஎழுத்தாளர்களின் சிறந்த திரைக்கதைகளைச் சரியான தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கொண்டு சென்று அவற்றின் சிறப்புகளை எடுத்துரைத்து விற்றல்.
அனைத்து திரைக்கதை எழுத்தாளர்களும் தங்கள் பதிவு செய்யப்பட்ட திரைக்கதையை ஸ்கிரிப்டிக்குக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஸ்கிரிப்டிக் ஸ்கிரிப்ட் வங்கியில் சமர்ப்பிக்கும் முன், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் (SWAN) அல்லது இந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் (SWA) உங்கள் திரைக்கதை மற்றும் சுருக்கக்கதையை நீங்கள் பதிவு செய்யலாம். இணை உறுப்பினர் மூலம் நீங்கள் படங்களில் பணியாற்றாவிட்டாலும் உங்கள் திரைக்கதைகளைப் பதிவு செய்ய இரு சங்கங்களும் உங்களை அனுமதிக்கின்றன.
நீங்கள் இந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் உறுப்பினராக இருந்தால், உங்கள் சுருக்கக்கதை /திரைக்கதைகளை இணையவழியில் பதிவு செய்ய முடியும் என்பதால் இது எளிமையான ஒரு செயலாக இருக்கும்.
ஏதாவதொரு காரணத்திற்காக நீங்கள் SWAN அல்லது SWA இல் உறுப்பினராக முடியாவிட்டால், நீங்கள் சுய-பதிவு செய்யப்பட்ட உங்கள் திரைக்கதைகளை (திரைக்கதைகள் பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் ஒப்புகையுடன் அனுப்பப்படும்) உங்களுக்கு அனுப்பலாம் மற்றும் அதன் நகலை பதிவு செய்யப்பட்ட இடுகை விவரங்களை எங்களுக்கு அனுப்பலாம்.
அனைத்து எழுத்தாளர்களும் தங்கள் சொந்த நலனைப் பாதுகாக்க ஏதாவது ஒரு வழியில் பதிவு செய்யப்பட்ட ஸ்கிரிப்ட்டுகளை மட்டுமே அனுப்புமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் கேள்வி பதில்கள்திரைத்துறையில் பட்டறிவுமிக்க கலைஞர்களைக் கொண்டு, நூற்றுக்கணக்கான திரைக்கதைகளைத் திறனாய்வு செய்து, அவற்றுள் சிறந்த திரைக்கதைகளை மட்டுமே ஸ்கிரிப்டிக் வங்கியில் சேகரிக்கிறோம். தேர்வு செய்த திரைக்கதைகளைப் படப்பிடிப்புக்குத் தயார் நிலைக்குக் கொண்டு வந்து அதன் பின்னரே தயாரிப்பாளர்களுக்கு வழங்குகிறோம். தேர்வு செய்யப்பட்ட கதைகளை மட்டும் தயாரிப்பாளர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் காலத்தையும் பொருளையும் மிச்சம் செய்து தருகிறோம். நல்ல கதைகளைத் தேடும் இயக்குநர்களுக்கும் ஸ்கிரிப்டிக் வங்கி தயார் நிலை திரைக்கதைகளை வழங்கும். ஒரு குழுவோடு அமர்ந்து பல மாதங்கள் செலவு செய்து கதைகள் உருவாக்குவதற்கு மாற்றாக, தயார் நிலையில் இருக்கும் திரைக்கதைகளை எடுத்துக் கொண்டு அவர்கள் படப்பிடிப்புக்குத் திட்டமிடலாம். ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு திரையுலகில் நடப்பதுபோல் இயக்குநர்கள் தங்களின் இயக்கத்தில் மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்தமுடியும்.
திறமைமிகுந்த எழுத்தாளர்களின் சிறந்த திரைக்கதைகளைச் சரியான தயாரிப்பாளரிடம் கொண்டுசேர்ப்பதே ஸ்கிரிப்டிக்கின் நோக்கம். திரைக்கதையாசிரியர்கள் தங்கள் பதிவு செய்த திரைக்கதைகளை எங்கள் குழுவுக்கு அனுப்பலாம். உங்கள் திரைக்கதையைத் திறனாய்வு செய்து உங்களுக்குத் திறனாய்வு அறிக்கையை வழங்குவோம். சிறந்த திரைக்கதைகளை, தேவையிருந்தால் மாற்றங்களுக்குப் பிறகு எங்கள் வங்கியில் சேர்த்து, அவற்றை நல்ல தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்குவோம். திரைக்கதைக்குத் தகுந்த ஊதியத்தைப் பெற்றுத் தருவோம்.
ஸ்கிரிப்டிக் குழுவிலிருந்து உள்ளீடுகளுடன் எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்ட திரைப்படங்களுக்கான மூலக்கதைகள். இந்தத் திரைக்கதைகள் முதன்மை மொழியில் நல்ல வெற்றி வாய்ப்பைப் பெற்றுவிட்டால் மற்ற மொழிகளில் மருவாக்கம் செய்வதற்கான நல்ல வாய்ப்பைப் பெறுகிறது.
நாவல்கள்/பழைய திரைப்படங்களின் தழுவல்கள் தற்போது, நல்ல வாய்ப்புகளை அளிக்கிறது. நாவல்கள்/பழைய திரைப்படங்களுக்கான உரிமைகள் ஸ்கிரிப்டிக் மூலம் முறையாகப் பெறப்பட்டது.
மற்ற மொழிகளில் வெற்றிபெற்ற/மிகவும் பாராட்டப்பட்ட படங்களின் மருவாக்கங்கள், மருவாக்க உரிமையை வாங்கி, தமிழ் பார்வையாளர்களின் உணர்வுகளுக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டதாகும்.
OTT இயங்குதளங்களின் இணையத் தொடர்களுக்கான திரைக்கதைகள், திரைக்கதை எழுத்தாளர்கள் குழுவினரால் பல மாதங்களாக உருவாக்கப்பட்ட திரைக்கதைகளாகும்.
“It is the golden age of a screenwriter. In this era, if a script writer, has the content, potential and patience to sit and write, he will be rewarded”
“If there are specialized screenplay writers in Tamil, I can make 4 films a year”
“I’m a reluctant writer. I always look to collaborate with writers”
“Scripts are what matter. If you get the foundations right and then you get the right ingredients on top, you stand a shot… but if you get those foundations wrong, then you absolutely don’t stand a shot. It’s very rare–almost never–that a good film gets made from a bad screenplay.”
“There’s nothing more important in making movies than the screenplay.”
“You can’t fix a bad script after you start shooting. The problems on the page only get bigger as they move to the big screen.”
“The script is what you’ve dreamed up–this is what it should be. The film is what you end up with.”
“Audiences are harder to please if you’re just giving them effects, but they’re easy to please if it’s a good story.”
“I have always credited the writer of the original material above the title: Mario Puzo’s The Godfather, Bram Stoker’s Dracula, or John Grisham’s The Rainmaker. I felt that I didn’t have the right to Francis Coppola’s anything unless I had written the story and the screenplay.”
“There is no point in having sharp images when you’ve fuzzy ideas.”
“Film’s thought of as a director’s medium because the director creates the end product that appears on the screen. It’s that stupid auteur theory again, that the director is the author of the film. But what does the director shoot—the telephone book? Writers became much more important when sound came in, but they’ve had to put up a valiant fight to get the credit they deserve.”
“Once you crack the script, everything else follows.”
ஸ்கிரிப்ட் எழுத்தாளர்கள் , ஸ்கிரிப்டிக்குக்கு விரிவான சுருக்கக்கதையை முதலில் அனுப்பிய பின்னர் தங்கள் முழுமையான ஸ்கிரிப்டுகளை அனுப்பலாம்...
மேலும் படிக்கதேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் முழுமையாக உருவாக்கப்பட்ட திரைக்கதைகளின், கதைச்சுருக்கம் மற்றும் முழுதிரைக்கதைகளை ஸ்கிரிப்டிக்…
மேலும் படிக்கதிரைக்கதை எழுத்தாளர்களின் திரைக்கதைகளைக் கையாளும்போது அவர்களின் அறிவுசார் உரிமைகளைப் பாதுகாக்க ஸ்கிரிப்டிக் உயர்தர...
மேலும் படிக்கஸ்கிரிப்டிக் எவ்வாறு ஸ்கிரிப்டுகளை அடையாளம் கண்டு உருவாக்கும்? தமிழ் மொழிக்காக மட்டும் கதைகள் வழங்கப்படுகின்றனவா?...
மேலும் படிக்கதொகுத்து நன்கு உருவாக்கப்பட்ட திரைக்கதைகள் தனிப்பட்ட திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், திரைக்கதை எழுத்தாளர்களுக்கும் பயனளிக்கும் வகையில், தென் திரைப்படத் தொழில்துறையின் முன்னிலை திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணையும் செயல்பாட்டில் ஸ்கிரிப்டிக் உள்ளது. இணைக்கப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்கள் இந்தப் பிரிவில் அவ்வப்போது புதுப்பிக்கப்படும்.
மேலும் பல தகவல்களை அறிந்துகொள்ள
இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் ஸ்கிரிப்டிக் குறித்த உங்கள் கருத்து அல்லது ஆலோசனையைப் பகிரவும்.
“Writing screenplay is one of the toughest jobs in the world.”